(மல்லிகை மகள் இதழில் நான் எழுதிய தொடரின் சுருக்கம்)
2. ஞாபகம் என்பது இணைக்கும் உத்தி
எல்லா வயதினரும்
ஏதாவது புதிதாகக் கற்றுக்கொண்டே இருக்கிறோம். ஆனால் படித்தது மறந்து போச்சு என்கிற
குரல்கள் கேட்காமல் இல்லை.
படித்தலில் நான்கு
நிலைகள் உண்டு:
1 பார்த்துப் படித்தல் ( Look))
. புத்தகத்தை மூடுதல்(Cover)
எழுதிப்பார்த்தல் (Write)
சரி பார்த்தல் (Check)
.
Look
என்பதற்கு நாம் நல்ல சூழ்நிலையில் படிக்க உட்காரவேண்டும். அமைதியான இடம். வீட்டில்
தனியறை. மொட்டை மாடி இத்தியாதிகள். சிலர் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பதைப் போன்ற அபத்தம்
கிடையாது. அவர்களால் மனதைக் குவிக்கமுடியாது. வார இதழ்களை அப்படி படிக்கலாம். கற்கும்
புத்தகங்களை அல்ல.
ஒரு
டாபிக்கை 30 நிமிடங்களுக்கு மேல் படிக்கக்கூடாது. ஓர் அத்தியாயத்தை முதல் வரியிலிருந்து
படிக்கவேண்டும் என்பதில்லை. புரட்டினால் அதில் நம்மைக் கவரும் பத்தி இருக்கும். அங்கிருந்து
ஆரம்பிக்கலாம். ஏற்கனவே படித்திருந்தாலும் பரவாயில்லை.
கண்கள்
முக்கியப் பங்காற்றும். ஓரிடத்தில் கண்கள் நிலைக்கும். இதை Fixation என்பர். ஒரு வார்த்தையிலிருந்து
மற்றொரு வார்த்தைக்கு 1/100 செகண்டில் கண் முன்னேறும். இதை Inter fixation என்பர்.
அதற்கப்புறம் கண்கள் விரிந்து ஒரு பாராவை பார்க்கும். இது span of recognition எனப்படும்..
சில சமயம் கண் பின்னோக்கிப் பார்க்கும். இது regression எனப்படும்.
அப்புறம்
ஒரு முக்கியமான கண்ணோக்கல் உண்டு. அது Eye-Voice span. எனப்படும். படிக்கும்போது வார்த்தைகளின்
ஒலி நமக்குக் கேட்கும். மனப்பாடம் செய்யும்போது மட்டும் வாய்விட்டுப் படியுங்கள். மற்ற
சமயத்தில் மௌனமாய்… இதுதான் மெத்தப் படிப்பதன் அடையாளம்.. ஏனெனில் எந்நேரமும் வாய்விட்டுப்
படித்தால் களைப்பாகிவிடுவோம்.
கண்களே
வார்தைத்களை உச்சரிக்கும். அதுதான் விளங்கிக் கொள்ளுதலுக்கு அடையாளம்.
அடுத்து
cover என்பதைக் காணலாம். இது வேறொன்றுமில்லை. கொஞ்சநேரம் சில பத்திகளைப் படித்தபின்னால்,
அல்லது மனப்பாடம் செய்யவேண்டிய வரிகளை நான்கைந்து முறை உரு ஏற்றிய பின்னால் புத்தகத்தை
மூடிவிடுவதாகும். நாம் மேலே சொன்ன நான்கு நிலைகளில் இதுதான் முக்கிய பங்காற்றும். புத்தகத்தை
கவர் செய்வது, அதாவது மூடிவிடுவதென்பது, அதுவரை படித்ததை ஞாபகத்திற்கு கொண்டுவரும்
நிலை.
சிறுவயதில்
எனக்குப் பக்கத்துவீட்டில் ஒரு தாத்தா இருந்தார். குழந்தைகளுக்கு தினமும் ஏதாவது தின்னக்கொடுப்பார்.
ஆனால் அதற்கு முன்னால் ஒரு போட்டி வைப்பார். மேசை மேல் பத்து பொருள்களை வைப்பார். அவற்றை
உற்றுப் பார்த்துவிட்டு சொல்லவேண்டும். ஹாலில் இருக்கும் அவரிடம் போய் சரியாகச் சொல்லவேண்டும்.
முதலில் சரியாகச் சொல்பவர்களுக்கு போனஸாக இரண்டு திண்பண்டம். மற்றவர்களுக்கு ஒன்றுதான்.
ஒரு டாக்டரின் பையன் தினமும் சரியாகச் சொல்வான். எப்படி ஞாபகத்தில் வைத்துகொண்டு சொல்கிறான்
என்ற ரகசியத்தை அவன் சொல்லவேயில்லை.
நான்
DIET ல் பணியிடையிடைப் பயிற்சி நடத்தும்போது ஞாபகப் படுத்திக்கொள்ள ஒரு டெக்னிக்கைச்
சொல்வேன்..
“பொருள்களை
நாம் வெறும் பொருளாகப் பார்க்கக்கூடாது. உதாரணமாக ஒரு மேசைமேல் கிண்ணம், பால், தேன்,
முள்கரண்டி, ரோஜாப்பூ இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நம் கற்பனைக் குதிரையைத்
தட்டிவிடணும். பால் எடுத்து கிண்ணத்துல கையைக் கழுவி தேனை எடுத்து தலையில் பூசி, முள்
கரண்டியால் தலையை வாரி ரோஜாப்புவை சூடணும். இப்படி பொரூள்களைத் தொடர்ச்சியாக வரிசைப்
படுத்திக்கணும். இதுக்கு Linking technique என்று பெயர்.
இப்போது
உன்களுக்கு ஒரு டெஸ்ட். எங்கே கற்பனை குதிரையைத் தட்டி லிங்க் செய்யுங்கள்
பொருள்கள்.:
செல்போன், காகிதம்,
பிளேடு, முகப்பவுடர், சீப்பு, தண்ணீர்
No comments:
Post a Comment