Monday, September 24, 2018

என் கவிதைகள் 14


இயற்கை இனிது

எது பிறந்தது முதலில்
அண்ட கோளங்கள்
இயற்கை வடிவம்
வெடிப்புற்று
புதிதாய் பெருக்கம்
ஒன்றிலிருந்து
மற்றொன்று
மற்றொன்றிலிருந்து
ஒன்றாய் வரிசை கட்டி
மரம் செடி கொடிகள்
சுழித்தோடும் ஆறு
நீலமாய் நீள் கடல்
குன்றும் மலையும்
நடுவில்
நாம் எங்ஙனம்
பிறப்பு இறப்பு
மறுபடி பிறப்பு
இறப்பதற்கே
பிறந்தோமா
ஆண்-பெண்-அலி
எதுவாகப் பிறந்தோம்
பெண் இயற்கை
ஆண் செயற்கை
பெண் ஏமம்
ஆண் காமம்
கூட்டமாய் குமுறலாய்
ஆட்டமாய் ஆனந்தமாய்
அறுசுவையாய் அற்புதமாய்
நாட்டம் தேட்டம்
அன்பு இயற்கை
பகை செயற்கை
பின்னதன்றோ
பூவுலகில் அதிகம்
இயற்கை வழிநின்றால்
இனிது உலகே

No comments:

Post a Comment

Featured Post

என் சிறுகதை. ஜனவரி 1968 கலைமகள் பத்திரிகையில் வெளியானது

  அவரும் அவளும்                    கையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஜங்க்‌ஷனுக்குக் கிளம்பினார் மாதவன். வழுக்கை விழுந்திருந்த அவருட...