Sunday, September 16, 2018

என் கவிதைகள் 9


அ ’கல்’ யா
கல்லாய் சமைந்தாள் அவள்
ஒரேயிரவு
சோரம் போனாள்
அதுவும் கணவன் உருவத்திடம்
காமம் வந்துற்றால்
கண் மண் தெரியாதென்பது
அவள் விஷயத்தில்
நிரூபணமாகிவிட்டது

இராமன் எப்போது
வருவானென்று
காலம் காலமாய்
காத்திருந்தாள்

அவளை
இப்போது
வருணன் தொட்டான்
வாயு தொட்டான்
மரம்செடி, கொடிகள் தொட்டன

இராமனுக்காக
காத்திருந்தாள்

ஒரு நாய் கழிக்க
அருகில் வந்து
மோப்பம் பிடித்தது
பயந்தவளின்
பெருமூச்சு அதற்கு கேட்க
பதறி வேறெங்கோ ஓடியது

இராமன் வந்தான்
தொடவில்லை
அவன்
பாத தூளிகள் பட்டன
உயிர்த்தெழுந்து
ஆசசரியமூட்டினாள்
அகல்யா


No comments:

Post a Comment

Featured Post

என் சிறுகதை. ஜனவரி 1968 கலைமகள் பத்திரிகையில் வெளியானது

  அவரும் அவளும்                    கையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஜங்க்‌ஷனுக்குக் கிளம்பினார் மாதவன். வழுக்கை விழுந்திருந்த அவருட...