Wednesday, September 12, 2018

என் கவிதைகள்


ஹிந்துக்கள் எழுச்சி

சங்கரன் ஒன்றே என்றான்
இராமானுஜன் மூன்று என்றான்
மத்வன்  இரண்டென விரல் விரித்தான்
மூவரும் இன்று ஒன்றிப்போயினர்
உலகில் பாரதம் எழுந்து நின்றது
பழைய மாச்சர்யங்கள்
பழஞ்சரக்காயின கண்டீர்

கணபதி தொழுதல் முதற்கொண்டு
தன்னேறிலா தெய்வ சந்நிதிகள்
கோயில்களாய் எழும்பின காணீர்
தெய்வ மறுப்பெனும் நோய்
செய்வதறியாது திகைத்தல் காணீர்
ஒன்றுபட்டோம் உயர்வடைய
ஓங்காரம் ஒலிக்கட்டும்

ஆனாலும் இது போதாதென
அவனியில் எடுத்துரைப்போம்
சுற்றிலும் மதப்பகைகள்
சூழ்ந்து நமை வீழ்த்த ஆயத்தம்
நாமார்க்கும் கெடுதல் செயவில்லை
நம்மைக் குதற வருகின்றார்.
போலிகள் ஊர்வலமாய் வருது பாரீர்
வேடங்கள் தரித்து மேட்டிமை பேசுகின்றார்
புரிந்து நடப்போம் ஒன்றாய் மண்ணில்

வங்கத்தை ஆளும் மங்கை
மாதேவிப் பந்தலுக்கு ஈயுகின்றாள்
ஆண்ட கட்சித் தலை ஒருவன்
ஆள் அம்பு சேனையுடன்
ஆங்காங்கே கோயிலை வணங்குகிறான்
வெகுண்டெழுவோம் வேடதாரிகளை
புறம் தள்ளி ஒட வைப்போம்

ஹிந்துக்கள் ஒன்றானோம்
இனி பாரதம் நமதே!



No comments:

Post a Comment

Featured Post

என் சிறுகதை. ஜனவரி 1968 கலைமகள் பத்திரிகையில் வெளியானது

  அவரும் அவளும்                    கையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஜங்க்‌ஷனுக்குக் கிளம்பினார் மாதவன். வழுக்கை விழுந்திருந்த அவருட...