Monday, September 10, 2018

என் கவிதைகள்


இரண்டு மாடுகளும் ஒரு நாயும்

நிறைவாய் நடந்தது அம்மா திதி
பிண்டங்களில் அம்மா, பாட்டி, முப்பாட்டி
மூவரும் வாழ்த்துருண்டைகளாயிருந்தனர்

நாங்கள் நமஸ்கரித்து
ஆசீர்வாத நீரும் அரிசிகளும் தலையில் விழுந்தன
மூவரையும் கரையேற்றவேண்டும்
மாடுகள் அல்லது நீரோடை ஏற்கும்
மாடுகளைத் தேடி அலைந்தேன்

இரண்டு மாடுகள் கண்ணில் பட்டன
கூட ஒரு நாய்

சாஸ்திரங்கள் நாய்கள்
பிண்டங்களை உண்டால் பாவமென்கிறது
சிறிது தயங்கினேன்…

இளவயதில் நானொரு iconoclast
அந்த குணம் எட்டிப் பார்த்தது

பிண்டவாசனையில் மாடுகள் அருகில் வந்து
என் பைகளை நக்கின
பைரவனும் எதிரே பசியில்
அருகில் நாக்கை நீட்டியது

பசியாற்றுவதில் அம்மா
அன்னபூரணியாக இருப்பார்
வாழை இலைகளில் பிண்டங்களை வைத்தேன்
பசித்த அனைவரும் உண்டனர்

பாவம் சேர்ந்தது எனக்கு
பரவாயில்லை
நாளை காலை சந்தியின்போது
போக்கிக்கொள்கிறேன்


No comments:

Post a Comment

Featured Post

என் சிறுகதை. ஜனவரி 1968 கலைமகள் பத்திரிகையில் வெளியானது

  அவரும் அவளும்                    கையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஜங்க்‌ஷனுக்குக் கிளம்பினார் மாதவன். வழுக்கை விழுந்திருந்த அவருட...