Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Sunday, September 23, 2018

என் கவிதைகள் 13


கிரிக்கெட் ரசனை

இந்தியர்கள்
கிரிக்கெட் பார்க்கிறார்கள்
அவர்களில் ரசனையுள்ளோர் எத்தனை?
ஒருவன் சொன்னான்
பார்ப்போர் முட்டாளென்று
சரிதான்
அவன் சொன்னது
95 சதவீதம்
முட்டாள்களே
Long on
Square leg
Gully
எதுவென கேளுங்கள்
இந்த சிம்பிள் இடங்களே
அவர்க்குத் தெரியாது
China man எதுவென
கேட்டால்
சொல்லத் தெரியாவிடில்
அப்புறம் என்ன ரசனை?
ரன்கள் கூட்டல்
மட்டும் தெரியும்
அதுவா ரசனை
பவுலர் எப்படி
வீச்சை மாற்றுகிறான்
பாருங்கள்
அடிப்பவன் சிலசமயம்
எத்தனை பவ்யமாய்
இடைவெளி பிடிக்கிறான்
கவனியுங்கள்
ரசியுங்கள்
டைட் பவுலிங்கில்
ஒரு ரன் அடிப்பது
சிக்ஸருக்குச் சமம்
ரசிக்கப் பழகுங்கள்
பேட்ஸ்மன் பவுலர்
இருவரையும்
பாராட்டுங்கள்
அவன் எந்த தேசத்தவன்
ஆனாலும்…
போங்கள்
முதலில்
வீரர்கள்  நிற்கும்
இடங்களை
கற்று வாருங்கள்
உங்கள் ரசனையே
மாறிவிடும்



No comments:

Post a Comment