Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Friday, September 14, 2018

என் கவிதைகள் 7



உறவுகள் புதிர் கதை

தாயின் யோனியிலிருந்து
தரையில் விழுந்தோம்
உறவுகள் முளைத்தன
ஆலமரமாய்க் கிளைத்தன

எந்நேரமும் ஸ்பரிசம்
வேண்டி ஏக்கமாயின
இதில்
ஆண் பெண் பேதமில்லை
ஆணொரு எக்ஸ்ட்ரொவெர்ட்
பெண்ணொரு இன்ட்ரோவெர்ட்
அவ்வளவுதான்…

எந்நேரமும்
ஆண்-பெண்
ஆண்-ஆண்
ஆண்-ஷீ ரோபோ
பெண்-பெண்
பெண்-உருளை ஆட்டோமெடிக்
 365*24*60*60*
உலகம் முயக்கத்தில்
ஒருநொடி நின்றாலும்
அகிலம் அழிந்தது

சிறுவனுக்கு முதலில்
வெள்ளை வெளிப்பாடு
சோப்புநீர் எனப் புரிதல்
சிறுமிக்கு உதிரம்
காயம் என அழுகை
விளங்க வைப்போர் வெகுசிலரே

இணையம் வந்தபின்னால்
போர்ன் ஸ்டாரை
பார்க்க தள்ளுமுள்ளு
அவள்
எலெக்ஷனில் நின்றால்
எதிரிகள் காணாமற்போவர்

செக்ஸ் புத்தகம் விற்று
பத்திரிகை அதிபரானோருண்டு
அப்போதும்
புதிது புதிதாய்
மயங்க முயங்க
உறுப்பினர் பிறக்கிறார்கள்
உறவே நீ புதிர்தான்
எந்நாளைக்கும்



No comments:

Post a Comment