Monday, September 24, 2018

என் கவிதைகள் 13


புதிதாய் பிறக்க…

ஒலிகள்
வானில் பரவும்
காதிழந்தாலும் கேட்கும்
எண்ணத்தின் ஓசைகள்
நல்லொலி கேட்கின்
நல்மணம் பரவும்
நன்மனம் கொண்டாடும்
தீயொலி கேட்கின்
நெருப்பிட்டது போல்
பகை வளரும்
மனம் கசக்கும்
மந்திரங்கள் ஒலிகள்
அந்த
சப்தங்கள் தெய்வீகம்
உடலில் பரவும்
உன்மத்தம் விலகும்
கண்ணுள் மறையும்
கனவுகள் திறக்கும்
உள்மன விரும்பல்
வெளிமனம் ஏற்கும்
ஒலியின்றி 
அமையாது உலகு
ஓம்என்போம்
புதிதாய் பிறப்போம்



1 comment:

  1. ஒம் எனும் ப்ரணவ மந்திரத்தின் மஹத்துவத்தை கவிதை வடிவில் தந்திருக்கிறீர்கள். அருமை.

    ReplyDelete

Featured Post

என் சிறுகதை. ஜனவரி 1968 கலைமகள் பத்திரிகையில் வெளியானது

  அவரும் அவளும்                    கையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஜங்க்‌ஷனுக்குக் கிளம்பினார் மாதவன். வழுக்கை விழுந்திருந்த அவருட...