Monday, September 17, 2018

வாய்ஸ் ( Voice Learning in English Grammar)


 "நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்"
இந்த என் புத்தகம் கிழக்கு பதிப்பக வெளியீடாக 2019 Chennai Book Fairல் கிடைக்கும்  . அதில் வாய்ஸ் என்பது எப்படி ஆங்கில இலக்கணத்தில் மிக முக்கியம் என்று சொல்லியிருக்கிறேன். 
அந்தக் கட்டுரையின் முன்னோட்டம் இது.
  வாய்ஸ் கத்துக்கலாமா?

‘‘கோமு! வாசல்ல யாரோ வாய்ஸ் குடுக்கறாங்க... யாருனு பார்த்துட்டு வா!’’ என்று வகுப்புக்கு வந்திருந்த கோமதியை அனுப்பி வைத்தார் உஷா மேம்.

கோமதி திரும்பி வந்தபோது ‘‘வாழைத்தண்டு போல உடம்பு... அலேக்!’’ என்று பழைய சினிமாப் பாடலை முணுமுணுத்தபடி, ‘‘காய்கறிக் காரன் ஆன்ட்டி! நீங்கவாய்ஸ்ன்ன தும் ரஜினிதான் வந்துட்டாரோனு நெனைச்சேன்!’’ என்றாள் கிண்ட லாக.

‘‘அவரை ஏன் கோமு வம்புக்கு இழுக்கற?’’ என்ற மேம், ‘‘இன்னிக்கு உங்களுக்கு நான்தான் வாய்ஸ் குடுக்க.. ம்ம்... கத்துக் குடுக்கப் போறேன்!’’ என்றபடி போர்டில் பெரிதாக ‘ VOICE ’ என்று எழுதினார்.

‘‘ஆன்ட்டி! நான் பத்தாம் கிளாஸ் படிச்சப்ப, எங்க மேம் இந்த வாய்ஸ் விஷயமா என்னைக் கேலி பண்ணினது ஞாபகத்துக்கு வருது!’’ என்றாள் கோமதி, தன் பள்ளி நாட்களை நினைவில் கொண்டு வந்தபடி.

‘‘அக்கா! அப்படி என்ன சொல்லிட்டீங்க?’’ என்று ஆவலுடன் கேட்டாள் வித்யா.

‘‘நாங்க ஃப்ரெண்ட்ஸ் அஞ்சு பேர் மரத்தடியில பேசிக்கிட்டிருந்தோம். அன்னைக்கு காலைல ஒரு பெரிய எலியை நான் கொன்னுட்டேன். அதை நான் இங்கிலீஷ்ல I was killed a rat -னு பெருமையா சொல்லிக் கிட்டிருந்தேன்.

அந்தப் பக்கமா வந்த இங்கிலீஷ் மேம், ‘என்ன கோமதி! நீ எலியை சாவடிச்சியா? அது உன்னை சாவடிச்சதா? அப்புறமா ஸ்டாஃப் ரூமுக்கு வந்து வாய்ஸை நல்லா கத்துக்கோனு சொல்லிட்டுப் போனாங்க.’’ என்று அப்பாவியாகச் சொல்லி முடித்தாள் கோமதி.

உடனே, மேம் சிரிக்காதபடி தன்னை கன்ட்ரோல் பண்ண, வித்யா விழுந்து விழுந்து சிரிக்க, அதைக் கண்டுகொள்ளாமல், ‘‘அன்னியிலருந்து இன்னிய வரைக்கும் எனக்கு வாய்ஸ் தகராறுதான் ஆன்ட்டி! நீங்கதான் க்ளியர் பண்ணனும்...’’ என்று கோரிக்கை வைத்தாள் கோமதி.

‘‘கண்டிப்பா கத்துத் தர்றேன் கோமு! இந்த was, were எல்லாம் வரக் கூடாத இடத்துல வந்து நம்மை மாட்ட வச்சிடும். சமயத்துல அர்த்தமே மாறிடும்!’’ என்ற மேம்..

No comments:

Post a Comment

Featured Post

என் சிறுகதை. ஜனவரி 1968 கலைமகள் பத்திரிகையில் வெளியானது

  அவரும் அவளும்                    கையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஜங்க்‌ஷனுக்குக் கிளம்பினார் மாதவன். வழுக்கை விழுந்திருந்த அவருட...