Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Saturday, October 6, 2018

என் கவிதைகள் 15


சாஸ்தா சாஸ்வதம்

பெண்-ஆண் என்றால்---
தாயெனவும் தந்தையெனவும்
தாரமெனவும் மணாளனெனவும்
மகளெனெவும் மகனெனவும்
சகோதரியெனவும் சகோதரனெனவும்
உறவுகள் இச்சையாகிடுமோ
முன்னோர் சொன்னதை மீறுவரோ
அவர்கள்  சொன்ன நியதி
நாற்பத்தொரு நாள் விரதம்
சாஸ்தா சாஸ்வதமாய்
அருளுவான் கண்டீர்
வீம்புக்கு
அவனைப் பார்க்கும்
கடவுளில்லை அவன்
வெறும் பார்த்தலில்
நன்மை விளையாது கண்டீர்
நான் நன்மை பெற்றவன்
நாளும் உரைப்பேன்
அனுபவமே யதார்த்தம்
மிலேச்சம் வேண்டாம்
பெண்டிரே உணர்வீர்
நாற்பத்தொரு நாள்
விரதமிருந்து காண்பீர்
ஒரு மாற்றுக் குறைந்தாலும்
நன்மையில்லை
சாஸ்வதமானவனை
சாதாரணமாய் எண்ணாதீர்
சவக்குழியில் விழாதீர்

No comments:

Post a Comment