Wednesday, October 31, 2018

இரும்பாய் ஒருவன்

இரும்பாய் ஒருவன்

பிரிந்து கிடந்தது இந்து நாடு
விடுதலை தந்தான் வெள்ளையன்
அவன் மனதில் குதூகலம்
இவர்கள்
ஒன்றாக முடியாதென எண்ணினான்
நகைத்தான் லண்டனில்

எட்வினா தோழன்
ஏதுமறியாது நின்றான்
காஷ்மீரத்தைப் பறிகொடுத்தான்

அதைப் பார்த்து
குட்டி ராஜாக்கள்
கும்மாளமிட்டனர்

அவன் வந்தான்
உடல்தான் தோல்
மனமோ இரும்பு கெட்டது
பேச்சினால் சிலரை
ஒன்றாக்கினான்

கேரளம் வீழ்ந்தது
ராஜஸ்தானம் மைசூர் சேர்ந்தன
இன்னும் பல பல
ஒன்றாயின

நடுவில் ஒரு நிஜாம்
நிஜ அரசன் நானென்றான்
பாக்கை துணைக்கழைத்தான்
பார்த்தான் இரும்பன்
படையை ஏவினான்
நவ துவாரமும் மூடி
மண்டியிட்டது நடுநாடு

அவன் இல்லையெனில்
இன்றைய நாமில்லை
கோமகன் சிலை திறப்பு இன்று
கோலாகல கொண்டாட்டம்

வாழ்க உயரமாய்
மண்ணுலக மீதில் என்றும்


No comments:

Post a Comment

Featured Post

என் சிறுகதை. ஜனவரி 1968 கலைமகள் பத்திரிகையில் வெளியானது

  அவரும் அவளும்                    கையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஜங்க்‌ஷனுக்குக் கிளம்பினார் மாதவன். வழுக்கை விழுந்திருந்த அவருட...