Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Saturday, May 30, 2020


நானே நானா, யாரோ தானா!!
8. 1965,66,67 ல் தமிழகம்
தமிழகத்தின் இன்றைய நல்லவைகளுக்கும், தீயவைகளுக்கும் இந்த மூன்று வருடங்கள் மிக முக்கியமானவை. 1965 ல் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன. ரயில்வே நிலையங்களில் உள்ள பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகளை தார் பூசி அழித்தார்கள். காட்பாடி தாண்டி வரும் தலங்கை என்கிற ஸ்டேஷனையே கொளுத்தி தரைமட்டம் ஆக்கினார்கள். பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. எல்லாரும் வீதிக்கு வந்தார்கள். பேண்ட் போட்டுக்கொண்டு போன மாணவர்களை போலீஸ் தடியால் அடித்தார்கள்.
1966 ல் அது நீறு பூத்த நெருப்பாய் இருந்தது. அது அணைந்துவிடாமல் திமுக பார்த்துக் கொண்டது. நான் பணியாற்றிய பள்ளியில் திமுக- காங்கிரஸ் ஆதரவு ஆசிரியர்கள் ஆசிரியர் அறையில் வாக்குவாதம் செய்தார்கள். நான் இந்தி எதிர்ப்பில் பங்குகொண்டு போலீஸ் என் காலை பதம் பார்த்ததால் திமுக ஆதரவு எடுத்தேன். போதாக்குறைக்கு மூதறிஞர் ராஜாஜி கூட்டணி அமைத்தார். 1967 தேர்தல் வந்தது. என் போன்ற ஆசிரியர்களை வாக்குச் சாவடியில் போட்டார்கள். என்னை ஏலகிரி மலை கிராமத்துக்குப் போட்டார்கள். என் வேலை வாக்காளர் ரோல் படித்து அடிக்கோடு இடுவது. என் பக்கத்தில் ரப்பர் ஸ்டாம்ப் கொடுப்பவர் இருந்தார். எல்லாரும் திமுக அனுதாபிகள். மலைவாழ் மக்களில் எல்லாரும் காங்கிரஸ் ஆதரவு. காளை மாட்டுச் சின்னம். அதில் சிலர் படிப்பறிவு இல்லாமல் அல்லது கண் பார்வை மங்கல் என்று வந்தால் இந்த ரப்பர் ஸ்டாம்ப் ஆசாமி அவர்களுடன் செல்வார். இதோ மாட்டுக்கு குத்துகிறேன் என்று உதய சூரியனுக்கு குத்திவிடுவார். அப்படி 50 ஓட்டுகளாவது போட்டிருப்பார். அந்தத் தேர்தலில் திமுக ஆட்சி பிடித்தது.
பள்ளியில் இவ்வாறு தாங்கள் ஓட்டர்களை ஏமாற்றி சூரியனுக்கு குத்தியதை ஆசிரியர்கள் பேசினார்கள். காங்கிரஸ் ஆதரவு ஆசிரியர்கள் வாயடைத்துப் போனார்கள்.
இன்று நினைத்துப் பார்க்கிறேன். எத்தனை பெரிய தவறுகளை அந்த ஆசிரியர் கூட்டம், என்னையும் சேர்த்து, செய்துவிட்டது.
எம்ஜியார் இன்னும் சிறப்பாக ஆட்சி செய்திருக்கலாம். ஆனால் அவருக்குத் தகுந்த அறிவுறுத்தல் இல்லை. அவருக்குப் பின் வந்த ஜெயலலிதா தான் படித்தவர் என்றாலும், கூடா நட்பின் விளைவினால் தமிழ்நாட்டைக் கெடுத்துவிட்டுப் போய்விட்டார்.
இப்போது யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆள் மாறாலாமே தவிர நடத்தை அதேமாதிரிதான் இருக்கும். அப்படி தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில் தமிழ்நாடு இருக்கிறது. டாஸ்மாக்கில் தங்களை இழந்த கூட்டத்திற்கு வேறு சிந்தனை வராது.



Friday, May 29, 2020

நானே நானா, யாரோ தானா!!

நானே நானா, யாரோ தானா!!

7. அழகழகாய் ஐந்து பெண்கள்
மூன்று வருடங்கள் நான் அன்டிரெயிண்ட் ஆசிரியராக அந்த அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தேன். (1966-69). என் வீட்டில் அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை.. ஏனெனில் நான்கு வீடுகள் தள்ளி சிண்ட்கேட் வங்கி மானேஜர் பழக்கமாகியிருந்தார். அம்மாவிடம் அவர் தெலுங்கில் பேசுவார். ரூபாய் இரண்டாயிரம் மேலே உள்ளவர்களுக்குக் கொடுத்தால் கிளார்க் வேலை வாங்கிவிடலாம் என்றார். அது வங்கிகள் தேசியமயமாகாத காலம். என்னிடம் கேட்டபோது
எனக்கு ஆசிரியர் வேலைதான் பிடித்திருக்கிறது, நான் சென்னையில் BT (Now B.Ed) படிக்கப் போகிறேன் என்று சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் 1969 ல் சேர்ந்துவிட்டேன். அப்போது தீபம், தினமணி கதிர், கலைமகள் என்று பத்திரிகைகளில் என் கதை, கட்டுரைகள் பிரசுரமாகியிருந்தன. கல்லூரி முதல்வருக்கு என்னைப் பிடித்துப்போய்விட்டது. எனக்கும் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
எனக்கு கல்லூரி ஹாஸ்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் நானும் இன்னொரு மாணவனும் தி.நகரில் உஸ்மான் ரோட்டில் ஒரு மாதாந்திர லாட்ஜில் அறை எடுத்தோம். இப்போது அர்ச்சனா ஸ்வீட்ஸ் இருக்கிறதே அதன் மேல்மாடியில். லாட்ஜ் முதலாளி மியூஸிக் அகாடாமி எதிரே பங்களவில் இருந்தார். அவரைப் பார்த்தது கூட இல்லை எதிரே ரேகா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருந்தது. இரு கோடுகள் படத்தில் ஒரு சீனில் வரும். அதன் ஷூட்டிங் பார்தேன்.
நாதன்ஸ் கஃபேயில் 30 டிக்கெட் சாப்பாடு புக் ரூ90 தான். காலை 8.30 மணிக்கே சாப்பாடு ரெடி. போர் அடித்தால் பாண்டி பஜார் கீதா கேப்பில் ராத்திரி சாப்பாடு. எலெக்டிரிக் டிரெயின் ஸ்டூடண்ட்ஸ் மூன்று மாத சீசன் டிக்கெட் வெறும் ரூ.7.50 தான். அதாவது தாம்பரம் டு பீச். .
ஒருநாள் மாலை கல்லூரி விட்டதும் லாட்ஜுக்கு வந்தால், எங்கள் அறைப் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. என் டிரங்க் பெட்டியும், நண்பனுடைய பெட்டியும் சூறையாடப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்தன. மானேஜர் வந்து பார்த்தார். நான் பர்ஸ் உபயோகிக்காமல், கிழவிகள் வைத்துக்கொள்வார்களே அது போன்ற சுருக்குப் பையில் பணம் வைத்திருந்தேன். அதனால் என் பணம் அப்படியே இருந்தது. திருட வந்தவன் பர்ஸை எதிர்பார்த்திருப்பான். ஆனால் என் நண்பனுடைய பர்ஸ் போய்விட்டது. போனில் லாட்ஜ் ஓனரைப் பிடித்து புகார் சொன்னால் ஒரு லேடி போலீஸில் புகார் செய்யச் சொன்னாள். அடுத்தநாள் தாழ்ப்பாளை ரிபேர் செய்ய மானேஜரிடம் சொன்னாள்.

அப்போது இரவு 9 மணி ஆகிவிட்டது. பஸ் ஸ்டாண்டு அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் மிகுந்த பரபரப்பாய் இருந்த்து. ஒரு போலீஸ்கார்ர் என்னை கழுத்தைப் பிடித்துத் தள்ளி வெளியே விட்டார். வழிவிடு என்றதும் ஒரு வேன் வந்து நின்றது. அதிலிருந்து அழகழகாய் ஐந்து ஆறு இளம் பெண்கள் இறக்கிவிடப்பட்டார்கள். கூடவே நான்கைந்து ஆண்கள். அந்த போலீஸ்கார்ர் சொன்னார் “தம்பீ இது பிராத்தல் கேஸ்கள். நீ உள்ளே இருந்திருந்தால் உன்னையும் அவங்களோடு சேத்துவிட்டிருப்பாங்க. நாளைக்கு வந்து கம்ப்ளைண்ட் கொடு” என்றார். நானும் என் நண்பனும் தப்பித்தால் போதும் என அறைக்கு வந்து சேர்ந்தோம்.
அடுத்த நாள் நாங்கள் கல்லூரிக்குப் போகவில்லை. தாழ்ப்பாள் ரிப்பேர் செய்யப்பட்டது.

பக்கத்து அறையில் பிரசாத் ஸ்டூடியோவில் வேலை பார்த்த ஒரு தெலுங்கர் “எனக்கு மானேஜர் மீதுதான் சந்தேகம். நான் வேற லாட்ஜ் பார்க்கலாம்னு இருக்கேன்” என்றார்.

எங்களுக்கு அந்த தி.நகர் உஸ்மான் ரோடு பிடித்துவிட்டதால் காலி செய்யவில்லை.



Wednesday, May 27, 2020


நானே நானா, யாரோ தானா!!

6. நிறைவேறாத ஆசைகள்

அம்மாவுக்குப் பதினான்கு வயதிலேயே பூப்பு அடைவதற்கு முன்னாலேயே திருமணம் ஆகிவிட்டது. அப்போது அப்பாவுக்கு 19 வயது. அம்மாவுக்கு 23 வயதானபோதுதான் நான் பிறந்தேன். அதனால் என்னை எப்படி வளர்த்திருப்பார்கள் என்று உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

ஆமாம், நான் 50 ஏக்கர் நிலம் கொண்ட ஜமீந்தார் வீட்டுப் பிள்ளை. என்னைப் பார்த்துக்கொள்ள ஓர் ஆயா. என்னைத் தெருவில் இறங்கி விளையாடவே விடமாட்டாள். அந்த கிராமத்துப் பள்ளியில் நான் சேர்ந்த நாள் நினைவு இருக்கிறது. மேள தாளத்துடன் சேர்த்தார்கள். பட்டுச் சொக்காய். அன்று பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கினார்கள்.. மற்ற குழந்தைகள் எல்லாரும் சாதாரண உடையில் வந்தபோது நான் மட்டும் தினசரி உயர்வான உடை. வாத்தியார் மற்ற பிள்ளைகளை கோலால் அடித்தபோது என்னை மட்டும் அது சீந்தவேயில்லை. எனக்கு இதெல்லாம் ஒரு மாதிரி பட்டது. ஒரு மாணவன் கோலில் அடிபட்டு அழுதபோது எனக்கும் பயம் வந்து நானும் அழுத்து நினைவிருக்கிறது.

பள்ளி விட்டதும் ஆயா வந்து தயாராகப் பள்ளியில் நிற்பாள். மற்ற மாணவர்கள் குதூகலமாய் மண்ணில் ஆடும்போது ஆயா தடுத்து, வீட்டுக்குக் கூப்பிட்டுக்கொண்டு போய்விடுவாள். நான் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தால், ஆயாவும் நிற்பாள். என் பக்கத்து வீட்டுச் சிறுவன் என்னைக் கூப்பிட்டால் ஆயாசாமீ நீ அவங்களோட சேர வேணாம்என்பாள். எனக்கு மற்ற பிள்ளைகளெல்லாம் சுதந்திரமாய் திரியும்போது நான் மட்டும் ஏன் அப்படி முடியவில்லை என்று துக்கம் துக்கமாய் வரும். அதனால் அம்மாவிடம் வந்து அழுவேன். அப்பா அம்மாவை மீறி என் விஷயத்தில் எதுவும் செய்யமாட்டார். எனக்கு நான்கு வயதான போது தம்பி பிறந்தான். அதனால் ஆயாவின் கண்காணிப்பு எனக்கு ஆறு வயதான போது குறைந்தது. நான் மற்ற பையன்களோடு விளையாடப்போவேன்.

அப்பாவிடம் எனக்கும் டமடம் (நீச்சல்) கற்றுக்கொடுக்கும்படி கேட்டேன். அப்பா உதட்டில் விரலை வைத்து உஷ் அம்மா கிட்டே சொல்லாதே என்று எங்கள் நிலத்துக் கிணற்றுக்கு அழைத்துப்போனார். அப்பா ஒரு சொர புருடைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதை இடுப்பில் கட்டிக்கொள்ள, நிலத்து ஆள் வஜ்ஜிரம் கற்றுக்கொடுத்தார். இரண்டு நாள் கற்றிருப்பேன். அம்மாவிடம் யாரோ இதைச் சொல்லிவிட அம்மா ஆகாசத்துக்கும் பூமிக்கும் எகிறினாள். வஜ்ஜிரம் ஆமாம் என்று ஒப்புக்கொள்ள எனக்கு மீண்டும் காவல். என் நீச்சல் ஆசை இன்று வரை நிறைவேறாமல் போய்விட்டது.

பெங்களூரில் என் மூத்த மகள் இருக்கும் அபார்ட்மெண்ட்ஸில் நீச்சல் குளம் இருக்கிறது. அவள் நீச்சல் கற்றுக்கொண்டு,  என் இரு பேத்திகளும் அருமையாக நீந்துகிறார்கள். நான் அந்தக் குளத்துக்கு அருகில் உட்கார்ந்து சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் நீந்துவதை ஒரு பெருமூச்சுடன் காண்கிறேன். அம்மா என்னைச் சிறுவயதில் தடுத்தாள் இல்லையா? அப்போதிலிருந்து அம்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய் எதிர்க்க ஆரம்பித்தேன். அம்மா ஏதாவது சொன்னால் எதிரிடையாகச் செய்வேன்.

என் கதையைக் கேட்ட மனைவி சொன்னாள்:.

நீங்க சென்னையில்தானே சைதாப்பேட்டையில் படிச்சீங்க. பக்கத்துலியே ஒய் எம் சி ஏ நீச்சல் குளம் இருக்கே, . ஏன் கத்துக்கலை?”
ஆமாம். வாழ்வில் நான் செய்த தவறு அதுதான்.

சென்றதினி மீளாது….(நிறைவேறாதவை இன்னும் தொடரும்)


நானே நானா, யாரோ தானா!!

நானே நானா, யாரோ தானா!!

6. நிறைவேறாத ஆசைகள்
அம்மாவுக்குப் பதினான்கு வயதிலேயே பூப்பு அடைவதற்கு முன்னாலேயே திருமணம் ஆகிவிட்டது. அப்போது அப்பாவுக்கு 19 வயது. அம்மாவுக்கு 23 வயதானபோதுதான் நான் பிறந்தேன். அதனால் என்னை எப்படி வளர்த்திருப்பார்கள் என்று உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.
ஆமாம், நான் 50 ஏக்கர் நிலம் கொண்ட ஜமீந்தார் வீட்டுப் பிள்ளை. என்னைப் பார்த்துக்கொள்ள ஓர் ஆயா. என்னைத் தெருவில் இறங்கி விளையாடவே விடமாட்டாள். அந்த கிராமத்துப் பள்ளியில் நான் சேர்ந்த நாள் நினைவு இருக்கிறது. மேள தாளத்துடன் சேர்த்தார்கள். பட்டுச் சொக்காய். அன்று பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கினார்கள்.. மற்ற குழந்தைகள் எல்லாரும் சாதாரண உடையில் வந்தபோது நான் மட்டும் தினசரி உயர்வான உடை. வாத்தியார் மற்ற பிள்ளைகளை கோலால் அடித்தபோது என்னை மட்டும் அது சீந்தவேயில்லை.

எனக்கு இதெல்லாம் ஒரு மாதிரி பட்டது. ஒரு மாணவன் கோலில் அடிபட்டு அழுதபோது எனக்கும் பயம் வந்து நானும் அழுதது நினைவிருக்கிறது.
பள்ளி விட்டதும் ஆயா வந்து தயாராகப் பள்ளியில் நிற்பாள். மற்ற மாணவர்கள் குதூகலமாய் மண்ணில் ஆடும்போது ஆயா தடுத்து, வீட்டுக்குக் கூப்பிட்டுக்கொண்டு போய்விடுவாள். நான் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தால், ஆயாவும் நிற்பாள். என் பக்கத்து வீட்டுச் சிறுவன் என்னைக் கூப்பிட்டால் ஆயா “சாமீ நீ அவங்களோட சேர வேணாம்” என்பாள். எனக்கு மற்ற பிள்ளைகளெல்லாம் சுதந்திரமாய் திரியும்போது நான் மட்டும் ஏன் அப்படி முடியவில்லை என்று துக்கம் துக்கமாய் வரும்.

அதனால் அம்மாவிடம் வந்து அழுவேன். அப்பா அம்மாவை மீறி என் விஷயத்தில் எதுவும் செய்யமாட்டார். எனக்கு நான்கு வயதான போது தம்பி பிறந்தான். அதனால் ஆயாவின் கண்காணிப்பு எனக்கு ஆறு வயதான போது குறைந்தது. நான் மற்ற பையன்களோடு விளையாடப்போவேன்.
அப்பாவிடம் எனக்கும் டமடம் (நீச்சல்) கற்றுக்கொடுக்கும்படி கேட்டேன். அப்பா உதட்டில் விரலை வைத்து உஷ் அம்மா கிட்டே சொல்லாதே என்று எங்கள் நிலத்துக் கிணற்றுக்கு அழைத்துப்போனார். அப்பா ஒரு சொர புருடைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதை இடுப்பில் கட்டிக்கொள்ள, நிலத்து ஆள் வஜ்ஜிரம் கற்றுக்கொடுத்தார். இரண்டு நாள் கற்றிருப்பேன். அம்மாவிடம் யாரோ இதைச் சொல்லிவிட அம்மா ஆகாசத்துக்கும் பூமிக்கும் எகிறினாள். வஜ்ஜிரம் ஆமாம் என்று ஒப்புக்கொள்ள எனக்கு மீண்டும் காவல். என் நீச்சல் ஆசை இன்று வரை நிறைவேறாமல் போய்விட்டது.

பெங்களூரில் என் மூத்த மகள் இருக்கும் அபார்ட்மெண்ட்ஸில் நீச்சம் குளம் இருக்கிறது. அவள் நீச்சல் கற்றுக்கொண்டு, என் இரு பேத்திகளும் அருமையாக நீந்துகிறார்கள். நான் அந்தக் குளத்துக்கு அருகில் உட்கார்ந்து சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் நீந்துவதை ஒரு பெருமூச்சுடன் காண்கிறேன்.

அம்மா என்னைச் சிறுவயதில் தடுத்தாள் இல்லையா? அப்போதிலிருந்து அம்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய் எதிர்க்க ஆரம்பித்தேன். அம்மா ஏதாவது சொன்னால் எதிரிடையாகச் செய்வேன்.

என் கதையைக் கேட்ட மனைவி சொன்னாள்:.
“நீங்க சென்னையில்தானே சைதாப்பேட்டையில் படிச்சீங்க. பக்கத்துலியே ஒய் எம் சி ஏ நீச்சல் குளம் இருக்கே, . ஏன் கத்துக்கலை?”

ஆமாம். வாழ்வில் நான் செய்த தவறு அதுதான்.

சென்றதினி மீளாது….(நிறைவேறாதவை இன்னும் தொடரும்)