Thursday, November 15, 2018

தெறிக்கவிடுதல் ஒரு கலை

தெறிக்கவிடுதல் ஒரு கலை

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீடியாகாரர்களைத் தெறிக்கவிட்டார்.

"நிருபர்:  "ஏழு பேர் விடுதலை பற்றி சொல்லுங்கள்."

ரஜினி: "யார் அந்த ஏழு பேர்?"

அவருக்கு வீளக்கம் சொன்னார்களாம், அவர் கேட்டுக்கொண்டாராம்.
நான் அவர் தெரியாத மாதிரி அவர்களைத் தெறிக்கவிட்டிருக்கிறார் என்றே நம்புகிறேன்.

நான் பணியில் இருந்தபோது வகுப்பில் மாணவர்கள் சிலர் குறும்பாகக் கேள்வி கேட்பார்கள். நான் தெரியாத மாதிரி நடித்து, "அப்படீன்னா.. தெரியலையே" என்பேன்.

மாணவர்கள் நமது ஆசிரியர் இதுகூட தெரியாத ஜன்மமாக இருக்கிறாரே என்று சிரிப்பார்கள். பொதுவாக அது திரைப்படம் சம்பந்தமாக இருக்கும். நான் ஜாலியாக கலாய்ப்பேன். கால்மணி நேரம் கழித்து அவர்கள்  கேட்ட கேள்விக்குப் புள்ளி விவரத்தோடு, மேலும் சில விஷயங்களைச் சொல்லி வாயை அடைப்பேன். அது ஒரு டெக்னிக்

ரஜினி அரசியல் பற்றி அறியாதவர் என்று நினைத்த வேசி ஊடகங்கள் விவாதம் செய்தார்கள். அதை அவர் பார்த்திருந்தால் நமுட்டுச் சிரிப்பு சிரித்திருப்பார். அவர் போன்றவர்கள் இந்த ஊடகங்களுக்கு அவல் பொரி மெல்லுவதற்குக் கொடுப்பதுதான் தெறிக்கவைத்தல். கமலஹாஸன் கூட அப்படித்தான். அப்போதுதான் மீடியா வெளிச்சம் அவர்கள் மேல் படும்.
இதை contrarian technique  என்றும் கூறலாம்.

மோடி மேல் எப்படியாவது ஒரு ஊழல் புகாராவது சொல்லிவிடலாம் என்று ராகுல்காந்தி தினம் ஒரு புளுகை அவிழ்த்துவிடுவது கூட மீடியா வெளிசசத்திற்காக்த்தான். ஆனால் பாவம் தோழமைக் கட்சிகள் கூட அவ்ர் சொல்வதை நம்பவில்லை.

உச்ச நீதிமன்றம் அயோத்தி விஷயத்தில் மத்திய அரசை தெறிக்கவிட்டிருக்கிறது. ordinance கொண்டுவர வாய்ப்பளித்திருக்கிறது. பிஜேபி அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நக்சல்களுக்கு நடுராத்திரி திறக்கும் உச்ச நீதிமன்றம் வேண்டுமென்றே இதைச் செய்திருப்பதாகக் கருதுகிறேன்

No comments:

Post a Comment

Featured Post

என் சிறுகதை. ஜனவரி 1968 கலைமகள் பத்திரிகையில் வெளியானது

  அவரும் அவளும்                    கையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஜங்க்‌ஷனுக்குக் கிளம்பினார் மாதவன். வழுக்கை விழுந்திருந்த அவருட...