Sunday, January 24, 2021

அதாவது.......

 

ஒரு குட்டிக்கதை

மூன்றாவது உயிர்

சுரேஷுக்கும் புவனாவுக்கும் கல்யாணமாகி ஆறு மாதம் ஆகியிருந்தது. இரவு தூங்கும்போது சுரேஷ், “நமக்கு கல்யாணமாகி இன்னும் ஒரு புழு பூச்சி கூட உண்டாகலை” என்று ஏக்கத்துடன் சொன்னான்.

புவனா வயிற்றின் மேல் கையை வைத்துக்கொண்டு, ”மூன்றாவது உயிர் இருக்கு” என்றாள்.

“அடி, கள்ளீ! சொல்லவேயில்லையே. “ என்ற சுரேஷின் பார்வை அவள் வயிற்றின் மேல் போனது.

“ம்..ம்  கற்பனை செய்யாதீங்க. அதோ சுவத்துல பாருங்க” என்றாள்.

மூன்றாவது உயிரான பல்லி சுவரில் ஊர்ந்துகொண்டிருந்தது.

No comments:

Post a Comment

Featured Post

என் சிறுகதை. ஜனவரி 1968 கலைமகள் பத்திரிகையில் வெளியானது

  அவரும் அவளும்                    கையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஜங்க்‌ஷனுக்குக் கிளம்பினார் மாதவன். வழுக்கை விழுந்திருந்த அவருட...